Skip to main content

இவர்கள்தான் எனது ஸ்லீப்பர் செல்! - உண்மையை உடைத்த தினகரன்!

Published on 16/02/2021 | Edited on 16/02/2021

 

 

TTV Dinakaran open talk about sleeper cell

 

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநிலப் பொருளாளர் மனோகரனின் தாயார் நேற்று மறைந்தார். இன்று, அவருக்கு அஞ்சலி செலுத்தி அவருடைய திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

 

அப்போது, தன்னை பரதன் என்று சொல்லிக்கொள்ளும் துணை முதலமைச்சர் ஓபிஎஸ், பரதனாகவே அமைதி காத்திருந்தால், மீண்டும் அவர் பிப்ரவரியில் பரதனாகி இருப்பார். ஆனால், அவர் இராவணனோடு சேர்ந்துவிட்டார். அது அவருக்கும் நல்லதல்ல நாட்டிற்கும் நல்லதல்ல. அமைச்சர்களின் விமர்சனம் குறித்து கேட்டதற்கு, நாங்கள் எப்போதும் யாரையும் விமர்சிக்கத் தேவை இல்லை. எங்களுக்குத் தேவைப்பட்டால் மட்டும்தான் நாங்கள் மற்றவரைப் பற்றி விமர்சிப்போம். எனவே, இங்கு அமைச்சர்கள் கூறும் எந்த விமர்சனத்திற்கும் பதிலளிக்க வேண்டிய அவசியமும் கட்டாயமும் இல்லை.

 

எங்களுடைய ஒரே இலக்கு, மீண்டும் ஜனநாயக முறைப்படி தேர்தலை சந்தித்து அதிமுகவை மீட்டெடுப்பது மட்டும்தான். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் நிச்சயம் வெற்றிபெற்று அதிமுகவை கைப்பற்றும். ஒருவேளை திமுக தப்பித்தவறி வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தால் எங்களுடைய மடியில் கனமில்லை. ஆனால், அவர்கள் நிலைமையைச் சற்று யோசித்துப் பாருங்கள்.

 

ஸ்லீப்பர் செல் குறித்த கேள்விக்கு, ஸ்லீப்பர் செல்கள் என்று சொல்லக்கூடியவர்கள் எம்எல்ஏவோ, அமைச்சர்களோ அல்ல. அடிப்படையில் அவர்கள் சாதாரணத் தொண்டர்கள். எங்களுடைய ஸ்லீப்பர் செல்களை சின்னம்மா வருகையின்போது பார்த்திருப்பீர்கள். இவ்வாறு பேசினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“குக்கர் மாதிரிதானே அவருடைய முகமும் குண்டா இருக்கு” - டிடிவி தினகரன் மனைவி கலகல பேச்சு!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
His face is chubby like a cooker tTV Dhinakaran's wife's speech

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் தங்க தமிழ்ச்செல்வன். அதிமுக சார்பில் நாராயணசாமி, பாஜக கூட்டணி சார்பில் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் மதன் உட்பட நான்கு முனை போட்டியுடன் சுயேட்சைகளும் களமிறங்கி தேர்தல் களத்தில் வலம் வருகிறார்கள். அதே சமயம் பாஜக கூட்டணி சார்பில் களம் இறங்கியுள்ள டி.டி.வி தினகரன் தேனி தொகுதியில் பல இடங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். மேலும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக தமிழகத்தில் பல பகுதிகளில் டிடிவி பிரச்சாரம் செய்யப்போவதாகவும்,  எனது மனைவியும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்றும் சொல்லி இருந்தார். 

His face is chubby like a cooker tTV Dhinakaran's wife's speech

அதன் அடிப்படையில் தான் டிடிவி தினகரன் மனைவி அனுராதா தனது கணவருக்காக தேனி பாராளுமன்ற தொகுதியில் உள்ள பல பகுதிகளில் தேர்தல் களத்தில் வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அதன்படி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அவரது மனைவி அனுராதா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது, “குக்கர் சின்னத்தை எல்லோரிடத்திலும் கொண்டு செல்லுங்கள். சின்னத்தில் குழப்பம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மற்றவருக்கும் சின்னத்தை எடுத்து சொல்லுங்கள். ஏனென்றால் இதற்கு முன் போட்டியிட்டபோது வேறொரு சின்னத்தில் டிடிவி தினகரன் போட்டியிட்டதால் இதை சொல்கிறேன். குக்கர் மாதிரிதானே அவருடைய முகமும் குண்டா இருக்கு”என கலகலப்பாக பேசி வாக்கு சேகரித்தார்.

Next Story

“இந்த ஜென்மத்தில் நான் கொடுத்து வச்ச பாக்கியம் இது” - டி.டி.வி தினகரனின் மனைவி!

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
TTV Dhinakaran's wife Anuradha is campaigning in Theni constituency

தேனி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க.வில் தங்க தமிழ்ச்செல்வன். அதிமுக சார்பில்  நாராயணசாமி, பிஜேபி கூட்டணி சார்பில் டி.டி.வி. தினகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் மதன் உள்பட நான்கு முனை போட்டியுடன் சுயேட்சைகளும் களமிறங்கி தேர்தல் களத்தில் வளம் வருகிறார்கள். இருந்தாலும் திமுக, அதிமுக, டிடிவிக்கு இடையே தான் கடும் போட்டியும் இருந்து வருகிறது.

இந்த நிலையில் தான் பிஜேபி கூட்டணி சார்பில் களம் இறங்கியுள்ள டி.டி.வி தினகரன் தொகுதியில் பல ஊர்களில் தேர்தல் பிரச்சாரம் செய்திருக்கிறார். அதைத் தொடர்ந்து மேலும் தேர்தல் பிரச்சாரம் செய்யவும் இருக்கிறார். இந்த நிலையில் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக தமிழகத்தில் பல பகுதிகளில் டிடிவி பிரச்சார செய்யப்போவதாகவும்,  எனது மனைவியும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்று சொல்லி இருக்கிறார். அதன் அடிப்படையில் தான் டிடிவி மனைவியான அனுராதா தனது கணவருக்காக தேனி  பாராளுமன்ற தொகுதியில் உள்ள பல பகுதிகளில் தேர்தல் களத்தில்  வாக்காளர் மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

TTV Dhinakaran's wife Anuradha is campaigning in Theni constituency

அந்த வகையில்,  முதன் முதலில் போடி தொகுதியில் உள்ள முத்தையன் செட்டிபட்டி கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு தனது பிரச்சாரத்தை அனுராதா தொடங்கினார். அப்போது அங்கு குடியிருந்த பெண்கள் மாலை சால்வை அணிவித்து வரவேற்றனர். அதைத் தொடர்ந்து அனுராதா பேசும் போது, உங்கள் வீட்டுப் பிள்ளை செல்வன் டிடிவி மனைவியாக உங்களிடம் நான் வந்திருக்கிறேன். அவர் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு பிரச்சாரம் செய்ய சென்று விட்டதால் ஒரு வாரம் பிரச்சாரத்திற்கு வரமாட்டார். அதனால் நான் உங்களைப் பார்க்க வந்திருக்கிறேன். இந்த ஜென்மத்தில் நான் கொடுத்து வச்ச பாக்கியம் இது. 16 வருடத்திற்கு பிறகு இங்கு வந்திருக்கிறார். அதிக வாக்கு வித்தியாசத்தில் அவரை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றுதான் எனது தாழ்மையான வேண்டுகோளை உங்களிடம் வைக்கிறேன்” என்று வாக்காளர் மக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார்.

அதோடு ஜாதி ரீதியாகவும் தலைவர்களை சந்தித்தும் வீடுகளுக்குள் சென்று வாக்காளர்களிடமும், பெண்களிடமும் ஆதரவு திரட்டி வருகிறார் அது போல் பிரச்சார வேனில் ஒவ்வொரு பகுதியாக சென்று குக்கர் சின்னத்தில் வாக்களிக்குமாறு வாக்காள மக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார்.