ஏழை- எளியோர் மலிவு விலையில் சாப்பிட அம்மா உணவகங்களை தொடங்கினார் ஜெயலலிதா. அதில் இட்லி ஒன்று ஒரு ரூபாய், சாம்பார் சாதம் ஒன்று ஐந்து ரூபாய், தயிர் சாதம் ஒன்று மூன்று ரூபாய், இரண்டு சப்பாத்தி மூன்று ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

Amma Unavagam

இந்த நிலையில் அம்மா உணவகங்களில் கட்டுமான தொழிலாளர்களுக்கு விலையில்லா உணவு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது.

Advertisment

Amma Unavagam

அதன்படி இன்று சென்னை சாந்தோமில் உள்ள அம்மா உணவகத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கு விலையில்லா உணவு வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்து, கட்டுமான தொழிலாளர்களுக்கு விலையில்லா உணவை வழங்கினார். தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் உணவை எடப்பாடி பழனிசாமி ருசி பார்த்தார்.

Amma Unavagam

சென்னை மாநகராட்சியில் உள்ள 407 அம்மா உணவகங்களில் கட்டுமான தொழிலாளர்களுக்கு விலையில்லா உணவு வழங்கப்படுகிறது. பதிவு செய்து அடையாள அட்டை வைத்துள்ள தொழிலாளர்களுக்கு விலையில்லா உணவு வழங்கப்படும்.

Advertisment