Skip to main content

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஓய்வூதியர்கள் போராட்டம்!

Published on 28/09/2021 | Edited on 28/09/2021

 

Transport pensioners struggle by emphasizing various demands

 

ஈரோட்டில் உள்ள போக்குவரத்து பணிமனை அலுவலகத்தில் 28ந் தேதியான இன்று மதியம், ஈரோடு போக்குவரத்து ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் பல்வேறு தொழிற்சங்கத்தினரும் கலந்து கொண்டனர். சங்க நிர்வாகி ஜெகநாதன் ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை தாங்கினார். மாநில இணைச் செயலாளர் நடராஜன், துணைப் பொதுச் செயலாளர் ரவிச்சந்திரன், பொதுச் செயலாளர் ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். “195 சதவீத அகவிலைப்படி உயர்வு ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். நிலுவைத் தொகையை 1995-ம் ஆண்டு  நவம்பர் மாதம் முதல் கணக்கிட்டு வழங்க வேண்டும்.

 

போக்குவரத்து ஓய்வூதியர்  குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். விருப்ப ஓய்வில் சென்றவர்களுக்கு ஓய்வூதிய பலன்களை விரைவாக வழங்க வேண்டும். பணியில் இறந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு  வழங்க வேண்டிய ரூபாய் மூன்று லட்சத்தைத் தாமதமில்லாமல் வழங்குவதுடன் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியம் பெறும் பெண்களுக்கு மருத்துவப்படி வழங்க வேண்டும். கூட்டுறவு சிக்கன கடன் சங்கம் ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய பங்கு தொகையை வட்டியுடன் வழங்க வேண்டும்”என பல்வேறு கோரிக்கை வலியுறுத்திக் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

கொடுமுடியில் ஜன்சதாப்தி ரயில் நின்று செல்ல கோரி திமுக எம்.பி மனு

Published on 03/07/2024 | Edited on 03/07/2024
DMK MP petition demanding Janshatabdi train stop at Kodumudi

ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் பக்தர்களின் வசதிக்காக ஜன்சதாப்தி ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரயில்வே அமைச்சரிடம் ஈரோடு எம்பி பிரகாஷ் நேரில் மனு கொடுத்து வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவியிடம் ஈரோடு எம்பி பிரகாஷ் அளித்துள்ள மனுவில், “ஈரோடு நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட கொடுமுடியில் மகுடேஸ்வரர் மற்றும் வீரநாராயண பெருமாள் கோயில்கள் உள்ளது. இந்த புனிதத் தலத்திற்கு நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.தற்போது தெற்கு ரயில்வே சார்பில் கோவையிலிருந்து மயிலாடுதுறைக்கும், மயிலாடுதுறையிலிருந்து கோவைக்கும் ஜனசதாப்தி ரயில் இயக்கப்படுகிறது. இந்த இரண்டு ரயில்களும் கொடுமுடி வழியாகச் செல்கின்றன. கொடுமுடி ஆன்மிக முக்கியத்துவம் பெற்ற இடமாக உள்ளதால் கொடுமுடி ரயில் நிலையத்தில் ஜன்சதாப்தி நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் பக்தர்களுக்கு மட்டுமின்றி, கொடுமுடியில் உள்ள உள்ளூர் வியாபாரிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

இதே போல ஈரோடு மற்றும் சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்படும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் ஈரோடு ரயில்நிலையத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்படுகின்றது. இந்த ரயில் அதிகாலை 3:40 மணிக்கு சென்னை சென்ட்ரலுக்கு சென்றுவிடுகின்றது. அதிகாலை நேரத்திற்கு சென்றுவிடுவதால் பயணிகள் சென்னை சென்ட்ரலில் இருந்து வெளியே செல்வதில் பல்வேறு சிரமங்களை சந்திக்க வேண்டி உள்ளது. எனவே ஈரோட்டில் இருந்து இரவு 10 மணிக்கு ரயில் புறப்பட்டால் பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். இக்கோரிக்கைகளை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த மனுவை ரயில்வே வாரியத் தலைவர் ஜெயவர்மா சின்ஹாவிடமும் திமுக எம்.பி பிரகாஷ் அளித்துள்ளார். 

Next Story

மூன்று புதிய சட்டங்களை நிறுத்தி வைக்கக் கோரி வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு; பணிகள் பாதிப்பு

Published on 01/07/2024 | Edited on 01/07/2024
Lawyers boycott court seeking suspension of three new laws

இந்தியா முழுக்க இன்று முதல் மூன்று புதிய சட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்த புதிய சட்டங்களுக்கு வக்கீல் கூட்டமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த  மூன்று புதிய சட்டங்களை நிறுத்தி வைக்கக் கோரியும், பெயர் மாற்றக் கோரியும் வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜாக்) சார்பில் இன்று முதல் வரும் 8-ந் தேதி வரை கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட முடிவு செய்யப்பட்டது.

அதன்படி இன்று ஈரோடு மாவட்டத்தில் வக்கீல்கள் கோட் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு பெருந்துறை கொடுமுடி அந்தியூர் பவானி உள் படம் மாவட்டம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் பணியாற்றும் வக்கீல்கள் இன்று முதல் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மொத்தம் மாவட்டம் முழுவதும் 1300க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் கோர்ட்டு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. போராட்டத்தின் அடுத்த கட்டமாக நாளை (செவ்வாய்க்கிழமை) அந்தந்த நீதிமன்றம் அருகே  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வக்கீல்கள் முடிவு செய்துள்ளனர்.