Published on 05/09/2020 | Edited on 05/09/2020
தமிழகத்தில், மாவட்டங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்துக்கு வரும் 7-ந்தேதி முதல் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் 7-ந்தேதி முதல் 13 சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது. அதன்படி நேற்று முன்தினம் சென்னையில் இருந்து கோவை, மதுரை, தூத்துக்குடி, திருச்சி, காரைக்குடி மற்றும் கோவையில் இருந்து மயிலாடுதுறைக்கும் 9 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டன.
இதனையடுத்து இன்று காலை முதல் ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு துவங்கியது. எழும்பூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் முன் பதிவு செய்ய பயணிகள் வரிசையில் காத்திருந்தனர்.