முதல்வராக ஆசைப்படும் ரீல் தலைவர்களுக்கு மத்தியில் எடப்பாடியார் ஒரு ரியல் தலைவர். ஒரு சினிமாவில் நடித்து விட்டு மறு சினிமா வாய்ப்பு தரும் முன்பே முதல்வராக ரீல் தலைவர்கள் ஆசைப்படுகின்றனர் என்று முதல்வர் பழனிசாமியை விமர்சித்த நடிகர் ரஜினிகாந்துக்கு அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா பதிலடி தந்துள்ளது.
மேலும் ஒரு தொண்டனாலும் தலைவனாக முடியும், தமிழ் உலகை ஆளுகிற முதல்வனாக முடியும் என நிரூபித்துள்ளார் பழனிசாமி.
![admk party official media namathu amma said actor rajini kanth article](http://image.nakkheeran.in/cdn/farfuture/4aSIvCXLyR25Tc1-sgYGCdefn43Htc_n2HAQ8_jXIG0/1574130256/sites/default/files/inline-images/rajini_103.jpg)
கண்டக்டராக வாழ்க்கையை தொடங்கிய ரஜினியும் சூப்பர் ஸ்டாராவோம் என கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். காலம் கொடுக்கும் வாய்ப்பை கண்ணியம் குன்றாத உழைப்பால் தமதாக்கி கொள்பவர்கள் தலைவர்களாக உருவாகிறார்கள் அப்படித்தான் எடப்பாடியாரும் படிப்படியாய் உழைத்து தமிழக முதல்வராக உயர்ந்துள்ளார் என்று அந்நாளேடு தெரிவித்துள்ளது.
முதல்வர் ஆவோம் என எடப்பாடி பழனிசாமியே நினைத்திருக்க மாட்டார் என கூறியிருந்தார் ரஜினி என்பது குறிப்பிடத்தக்கது.