![NN](http://image.nakkheeran.in/cdn/farfuture/b5Tg-V-vcBiJzngAyc-e4L3OJMCWSye9pbSslNCyK5s/1702545577/sites/default/files/inline-images/A3681.jpg)
கோவையில் தன்பாலின சேர்க்கைக்காக கல்லூரி இளைஞரை அழைத்த கும்பல் அவரைத் தாக்கி செல்போன் மற்றும் பணத்தைப் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் கல்லூரி மாணவர் ஒருவர் பிரபலமான மொபைல் செயலியை பயன்படுத்தி வந்த நிலையில், அதில் அடையாளம் தெரியாத சில நபர்களுடன் பழகி வந்துள்ளார். அந்த மொபைல் செயலியில் இருந்து அடையாளம் தெரியாத நபர், தன் பாலின சேர்க்கைக்கு இளைஞரை அழைத்துள்ளார். இதனை நம்பி சென்ற அந்த கல்லூரி இளைஞரை தாக்கிய ஒரு கும்பல், அவரிடம் இருந்து செல்போன் மற்றும் 11 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் ஆகியவற்றை பறித்துச் சென்றுள்ளனர்.
இது குறித்து உடனடியாக சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்கப்பட்டது. கும்பலால் தாக்கப்பட்டு பின்புற தலையில் காயமடைந்த கல்லூரி மாணவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செல்போன் செயலி மூலம் அறிமுகமாகும், முன்பின் தெரியாதவர்களை நம்பி இதுபோல் வெளியே செல்ல வேண்டாம் என போலீசார் எச்சரித்துள்ளனர்.