![Trade unions protest against federal government](http://image.nakkheeran.in/cdn/farfuture/uc8ZNPWCFFsUks5OCMGJVYXTICWH-S5ujE5N_W2swH4/1628494560/sites/default/files/2021-08/citu-1.jpg)
![Trade unions protest against federal government](http://image.nakkheeran.in/cdn/farfuture/rhCplaepVX8ZxxJbPTbRNseWA5bRro7VAYZq06Qkl6E/1628494560/sites/default/files/2021-08/citu-2.jpg)
![Trade unions protest against federal government](http://image.nakkheeran.in/cdn/farfuture/xTkp6-3s6MN4M4bTm4CoYdJL_os_7oT5lwwx9LXGD7c/1628494560/sites/default/files/2021-08/citu-3.jpg)
![Trade unions protest against federal government](http://image.nakkheeran.in/cdn/farfuture/py8cKnPnNtM0fT9VE_P-sf8k42-8mybW7i4ykF0L3r0/1628494560/sites/default/files/2021-08/citu-56.jpg)
![Trade unions protest against federal government](http://image.nakkheeran.in/cdn/farfuture/pZIRinOfvNyGmAgu4ICM0q0bHxshGz5YEYnlt6tPBgg/1628494560/sites/default/files/2021-08/citu-4.jpg)
Published on 09/08/2021 | Edited on 09/08/2021
சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே சிஐடியு, தொமுச உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்களின் சார்பில் ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தின் நினைவுநாளான இன்று (09.08.2021) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ‘கொள்ளையனே வெளியேறு’ என்ற முழக்கத்துடன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், தொழிலாளர் நல சட்டங்களை 4 தொகுப்புகளாக மாற்றுவதைக் கைவிடக் கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.