Published on 28/02/2019 | Edited on 28/02/2019
பாகிஸ்தான் கட்டுப்பாட்டிலுள்ள இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனின் குடும்பத்தை சென்னை மாடம்பாக்கத்திலுள்ள அவர்களது வீட்டில் டி.ஆர். பாலு உள்ளிட்ட திமுகவினர் நேரில் சந்தித்தனர். இந்த சந்திப்பிற்கு பிறகான பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் கூறியது,
அபிநந்தனின் குடும்பத்தினர் மிக,மிக தைரியமாக இருக்கின்றனர், கவலைப்படாமல் இருக்கின்றனர். அவர்களைப் பார்க்க சென்ற எங்களுக்கு அவர்கள் ஆறுதல் கூறுகின்றனர், அந்தளவுக்கு அவர்கள் தைரியமாக இருக்கின்றனர். அவர் ஒரு மாவீரர், அவர் அந்தப் பணியை மிக சிறப்பாக செய்ததற்கு அவர்கள் பெருமை கொள்கின்றனர். இதில் மத்திய அரசு, எதிர்கட்சிகள் என்ற கேள்விக்கே இடமில்லை. இதுபோன்ற மிகமோசமான சூழலில் அனைத்து இந்தியர்கள் ஒன்றாகவே சிந்திப்பர். அதுபோலதான் அரசியல் கட்சிகளும் சிந்திக்கின்றன.