வேலூர் மாநகராட்சி 59 வது வார்டுக்கு உட்பட்ட கன்சால்பேட்டை, ஆஞ்சநேயர் கோவில் தெருவில் அரசு இடத்தில் சுமார் 45 குடும்பத்தினர் 50 ஆண்டுகளுக்கு மேலாக வீடுகள் கட்டி வாழ்ந்து வருகின்றனர். அவற்றை காலி செய்யக் கோரி இன்று திடீரென வீடுகளில் நோட்டீஸ் ஒட்ட வந்த மாநகராட்சி அதிகாரிகளைத் தடுத்து நிறுத்திய பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அதனால் அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.
தங்களுக்கு இங்கேயே அரசு வீடு வழங்க வேண்டும் என்றும், தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள இடங்களை மீட்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். எங்களில் 10 பேருக்கு மட்டுமே மாற்று இடம் வழங்கியதாகவும் அரசு வழங்கிய அந்த இடத்தில் ஏற்கெனவே பலர் வீடு கட்டியுள்ளதால் அங்கும் தங்களால் செல்ல முடியவில்லை எனத் தெரிவித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் எதிர்ப்பினை அடுத்து மாநகராட்சி அதிகாரிகள் திருப்பி சென்றனர்.