Skip to main content
Breaking News
Breaking

பாஜக நிகழ்ச்சியில் காலணியால் தாக்கிக்கொண்ட பெண் நிர்வாகிகள்

Published on 23/12/2023 | Edited on 23/12/2023
 Women executives attacked with shoes at BJP event

வேலூரில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சியில் நிர்வாகிகள் ஒருவருக்கொருவர் கடுமையாக தாக்கி கொண்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒன்றிய பாஜக அரசின் திட்டங்கள் குறித்த பிரச்சார நிகழ்ச்சி வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் நடைபெற்றது.

மத்திய ஒன்றிய அரசின் 'பாரத் விகாஸ் சங்கல்ப யாத்திரை' பிரச்சார வாகனம் பல்வேறு கிராமங்களுக்கு சென்ற நிலையில் வேலூர் பேரணாம்பட்டு ஏரிகுத்தி பகுதிக்கு கடந்த 19ஆம் தேதி யாத்திரை வாகனம் வந்திருந்தது. இதில் ஊராட்சிமன்ற தலைவர் ஸ்ரீதேவி மற்றும் பாஜக மாவட்ட மகளிர் அணி செயலாளர் ரேகா முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பாஜகவை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

பாஜக ஒன்றிய தலைவராக உள்ள வனஜா என்பவர் தாமதமாக வந்துள்ளார். தான் தாமதமாக வந்த நிலையில் முன்கூட்டியே எப்படி நிகழ்ச்சியைத் தொடங்கினார்கள் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்பொழுது ஒருவருக்கொருவர் பேச வாக்குவாதம் முற்றியது. இதனால் அங்கு பாஜக நிர்வாகிகள் ரேகா- வனஜா ஆகியோர் காலணியால் தாக்கிக்கொண்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சார்ந்த செய்திகள்