Skip to main content

போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்...

Published on 02/11/2018 | Edited on 02/11/2018
bus strike

 

போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது. 


12 தொழிற்சங்கங்களின் ஆலோசனைக்குப்பிறகு போராட்ட அறிவிப்பு திரும்பப்பெறப்பட்டது. போக்குவரத்துதுறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் முன்னரே அறிவித்தபடி, தீபாவளி முன்பணம் இன்று வரவு வைக்கப்பட்டது. நிலுவைத்தொகை, ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. இதற்குமுன்னர் முத்தரப்பு பேச்சுவார்த்தை உள்ளிட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து அவை தோல்வி அடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது. பொதுமக்களின் நலனை கருத்தில்கொண்டு போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

அடுத்த 3 மணி நேரம்; 9 மாவட்டங்களுக்கு அலர்ட்

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
For the next 3 hours; Alert for 9 districts

தமிழகத்தில் அண்மையில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது. இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாகக் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் கடந்த ஒரு சில வாரங்களாக மழை பொழிந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முன்னதாக  சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், திண்டுக்கல், தேனி, கோவை, நீலகிரி, திருப்பூர், திருவள்ளூர், சென்னை,  செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 12 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக சென்னையைப் பொறுத்தவரையில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி தமிழகத்தின் நீலகிரி, கிருஷ்ணகிரி, திருப்பூர், கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் இந்திய வானிலை ஆய்வு மையம் தட்சிண கன்னடா மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் கொடுத்துள்ளது. கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தில் அதீத கனமழை பொழிந்து வருகிறது. குடகு உட்பட ஐந்து மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவின்  ஹசன் மாவட்டத்தில் இன்று கனமழைக்கான  மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் தட்சண கன்னடா மாவட்டத்தில் மூல்கி பகுதியில் 30 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

Next Story

நான்கு பேருந்துகளின் கண்ணாடி உடைப்பு ; போலீசார் விசாரணை

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
nn

ஈரோட்டில் நான்கு பேருந்துகளின் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரோடு சோலார் அருகே வெங்கடேசன் என்பவர் சொந்தமாக டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். வெளியூர்களுக்கு பேருந்துகளை இயக்கி வருகிறார். இந்த பேருந்துகள் அதே பகுதியில் இரவு நேரத்தில் நிறுத்தப்படுவது வழக்கம். இதேபோல் மற்ற பேருந்துகளும் அதே பகுதியில் நிறுத்தப்படுவது வழக்கம்.

நேற்று இரவு வழக்கம் போல் பேருந்துகள் நிறுத்தப்பட்டு இருந்தன. நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம நபர்கள் பேருந்துகள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் மூன்று பஸ்களின் முன்பக்க கண்ணாடிகள் உடைந்தன. அதேபோல் ஒரு சுற்றுலா வாகனத்தின் கண்ணாடியும் உடைந்தது. இது குறித்து வெங்கடேசனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் உடனடியாக இதுகுறித்து மொடக்குறிச்சி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொழில் போட்டி அல்லது முன் விரதம் காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் நடந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். அதன் அடிப்படையில் விசாரணையைத் தீவிரப்படுத்தி வருகின்றனர். நிறுவனத்தில் வேலை செய்த முன்னாள் ஊழியர்கள் மற்றும் பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.