லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நியூயார்க்கில் இருந்து பஃபல்லோ நகருக்கு சென்றார். அவரை விமான நிலையத்தில் அமைச்சர்கள் மற்றும் அமெரிக்க வாழ் தமிழர்கள் பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் வரவேற்றனர்.
பஃபல்லோ நகருக்கு அருகே ஓக்ஃபீல்ட் என்ற இடத்தில் உள்ள கால்நடைப் பண்ணையை முதலமைச்சர் பார்வையிட்டார். அப்போது கால்நடை பண்ணையில் உள்ள கன்றுக்குட்டி ஒன்றுக்கு முதல்வர் தீவனம் வழங்கினார். இது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தொழில்நுட்பங்கள், கால்நடைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். நோய் எதிர்ப்பு சக்தி உடைய புதிய ரக மாடுகள் மற்றும் ஆடுகளை உருவாக்குதல், பால் மற்றும் இதரப் பொருட்களைப் பதப்படுத்துதல் பற்றியும் முதலமைச்சர் கேட்டறிந்தார்.
மேலும் சேலம் மாவட்டம் தலைவாசலில் அமைக்கப்படவுள்ள உலகத்தரம் வாய்ந்த கால்நடைப் பூங்காவில் இந்த தொழில்நுட்பங்களை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தார். முதல்வருடன் அமைச்சர்கள் எம்.சி.சம்பத், ராஜேந்திரபாலாஜி, ஆர்.பி.உதயக்குமார், தலைமை செயலாளர் சண்முகம் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் உடனிருந்தனர்.
href="https://t.co/mwwrZ4xSSC">pic.twitter.com/mwwrZ4xSSC
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) September 3, 2019