தஞ்சை மாவட்டத்தில் கடந்த வாரம் வெளியான ஒரு சமூக பெண்களை இழிவாக பேசும் ஆடியோ சிங்கப்பூரில் தயாரிக்கப்பட்டு அங்கிருந்து தமிழ்நாட்டில் பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதிக்கு அனுப்பி வாட்ஸ் அப் களில் பரப்பிவிடப்பட்டதால் தமிழகம் முழுவதும் கொந்தளிப்பு எற்பட்டது. பல நாட்கள் போராட்டங்களும் நடந்தது.
இநத ஆடியோ விவகாரத்தால சட்ட ஒழுங்கு பிரச்சணை ஏற்பட்டிருந்ததால் 5 தனிப்படைகள் தீவிரமாக தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் வாட்ட்ஸ் அப் நிறுவனத்தின் உதவியுடன் சிங்கப்பூரில் ஆடியோ தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்ட தகவல் அறிந்து சம்மந்தப்பட்ட நபர்களை இந்தியாவுக்கு வரவைத்து போலிசார் கைது செய்து வருகின்றனர்.
இதுவரை ஆடியோரை பதிவு செய்த பட்டுக்கோட்டை கரிசல்காடு செல்வகுமார், ஆடியோ தயாரிக்க சொன்னதாக பள்ளிகொண்டான் வசந்த், ஆடியோவில் பேசியதாக வாராப்பூர் நெருஞ்சிப்பட்டி சக்தி என்கிற சத்தியராஜ் ஆகியோர் நேற்று வரை கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் வாட்ஸ் அப் தகவல்களை தமிழ்நாட்டில் பரப்பியதாக பேராவூரணிப் பகுதியை சேர்ந்த ஒரு சிறுவன் உள்பட 3 பேர் இன்று காலை கைது செய்யப்பட்டனர்.
இந்த தகவலை நக்கீரன் இணையத்தில் வாட்ஸ் அப் நிறுவனம் கொடுத்த தகவல்.. ஆடியோ பரப்பிய சிறுவன் உள்பட 3 பேரிடம் விசாரனை என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதே செய்தியில் சிங்கப்பூரில் இருந்து வரும் இன்னும் சிலரை கைது செய்ய போலிசார் தயாராக உள்ளனர் என்றும் கூடுதல் தகவல்களை கொடுத்திருந்தோம்.
நக்கீரன் இணைய செய்தியில் வெளியானது போலவே.. சம்மந்தப்பட்ட ஆடியோவை பரப்பிவிட இந்தியா சிம்கார்டை பயன்படுத்தியதும் தெரிய வந்தது. அந்த சிம் கார்டு கீரனூர் மோசகுடி கிராமம் ரெங்கையன் வாங்கி வைத்திருந்தது. அதில் புதிய வாட்ஸ் அப் தொடங்கி அந்த சிம்மில் இருந்தே ஆடியோக்கள் பரப்பிவிடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதால் ரெங்கையனையும் சிங்கப்பூரில் இருந்து வரவைக்கப்பட்டு புதுக்கோட்டை – பொன்னமராவதி போலிசார் கைது செய்துள்ளதாக தெரிய வருகிறது.
மேலும் சம்மந்தப்பட்ட ஆடியோவில் பேசிய புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நபரும், குறிப்பிட்ட ஆடியோவை முதலில் வெளியிட்ட தஞசை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நபரும் இந்தியாவிற்கு வரவைக்கப்பட்டுள்ளனர். அவர்களும் இன்று இரவு அல்லது நாளை கைது செய்யப்பட உள்ளனர். மேலும் இது சம்மந்தமாக திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை பகுதியில் உள்ள முக்கிய புள்ளிகளும் கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.