Published on 09/03/2020 | Edited on 09/03/2020
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று காலை 10.00 தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற உள்ளது. அதேபோல் கூட்டத்தொடர் ஏப்ரல் 9- ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது.
![tn assembly postponed speaker annouced](http://image.nakkheeran.in/cdn/farfuture/wtFSyak0Q1gCywSr5OBHIBa-_srqrCa92ge8ncmy4h4/1583728954/sites/default/files/inline-images/tn3.jpg)
இரண்டாவது அமர்வில் முதல் நாளான இன்று மறைந்த பேராசிரியர் க.அன்பழகன், முன்னாள் எம்.எல்.ஏ ப.சந்திரன் மற்றும் திருவொற்றியூர் திமுக எம்.எல்.ஏ கே.பி.பி.சாமி, குடியாத்தம் எம்.எல்.ஏ காத்தவராயன் ஆகியோருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சட்டப்பேரவையை வரும் புதன்கிழமை வரை சபாநாயகர் தனபால் ஒத்திவைத்தார்.
பிப்ரவரி 14- ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு பிப்ரவரி 20- ஆம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடரின் முதலாவது அமர்வு நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.