Skip to main content

தங்க நகைகளைப் பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர்!

Published on 18/03/2021 | Edited on 19/03/2021

 

tn assembly election flying squad seizures the gold in erode


தமிழக சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் பணம், பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை வழங்குவதைத் தடுக்கும் வகையில், தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் தொடர்ந்து வாகனத் தணிக்கை உட்பட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, ஈரோடு மாவட்டம், பவானி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மின்னவேட்டுவபாளையம் பகுதியில், பறக்கும் படை அலுவலர்கள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

 

அப்போது, கோபிசெட்டிபாளையத்திலிருந்து ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்த ஒரு இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகள், அதைச் சோதனை செய்ததில், இரு சக்கர வாகனத்தை ஓட்டிவந்த பிரவீன் என்பவரிடம் இருந்து இரண்டு லட்சம் ரூபாய் ரொக்கம், 250 கிராம் எடை கொண்ட தங்கக் கட்டி, 48 தங்கக் காசுகள், 660 கிராம் எடை கொண்ட 20 தங்கச் செயின், 8 தங்கக் கொடி, 24 கிராம் எடை கொண்ட இரண்டு தங்க வளையல், அதோடு 16 கிராம் முகப்பு தங்கத் தகடு ஆகியவற்றை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

 

tn assembly election flying squad seizures the gold in erode

 

இதைத் தொடர்ந்து தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள், பவானி வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அந்தப் பொருட்கள் அனைத்தையும் ஒப்படைத்தனர். திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்வுகளுக்குப் பொதுமக்கள் சிலர் கொடுத்த ஆர்டரின் பேரில் ஆபரணத் தங்கம் செய்யப்பட்டு அவர்களிடம் கொடுக்க எடுத்துச் சென்றதாக அந்த நபர் கூறியிருக்கிறார். நகைக்கடை ரசீது, முறையான ஆவணங்கள் கொண்டுவந்து கொடுத்து நகைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் தரப்பில் அவரிடம் கூறப்பட்டிருக்கிறது. பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் சீலிடப்பட்டு மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தார், தேர்தல் அலுவலர் . 

 

 

சார்ந்த செய்திகள்