


தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்க நான்கு நாட்கள் அரசுமுறைப் பயணமாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் சென்றடைந்தார். துபாய் சர்வதேச விமான நிலையத்தில் தமிழக முதலமைச்சருக்கு இந்திய, துபாய் நாடுகளின் தூதரக அதிகாரிகள் மற்றும் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, ஐக்கிய அரபு அமீரகத்துக்கான இந்திய துணைத் தூதர் அய்மன்புரி, துபாய் அரசு உயர் அலுவலர்கள் இசா அப்துல்லா அல்கோரர், ஸ்காலித் ஜமால் அல்ஹை உள்ளிட்டோர் பூங்கோத்துக் கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதைத் தொடர்ந்து, விமான நிலையத்திலிருந்து துபாய் அரசு வழங்கிய பிஎம்டபிள்யூ காரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நட்சத்திர விடுதிக்கு சென்றார். அதைத் தொடர்ந்து, உலக கண்காட்சியில் நாளை (25/03/2022) தமிழக அரங்கினை முதலமைச்சர் திறந்து வைக்கிறார்.