Skip to main content

ஓடைக்கு மழை நீர் வரும்...ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றிய மாவட்ட நிர்வாகம்!

Published on 26/08/2019 | Edited on 26/08/2019

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம் சர்வே நம்பர் 139, 214, 266, 337 ஆகிய அரசு ஓடை புறம்போக்கு வகைப்பாட்டில் உள்ள நிலங்கள் ஸ்ரீபூவனநாத சுவாமி திருக்கோயில் தேவஸ்தான பயன்பாட்டில் இருந்து வருகிறது. இதில் கோயில் கட்டுப்பாட்டில் 106 கடைகளும், தனி நபர்கள் ஆக்கிரமிப்பில் 25 கடைகளும் கடந்த 60 வருடங்களுக்கும் மேலாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தன. இதனை அகற்ற வலியுறுத்தி கோவில்பட்டி நீர்வரத்து ஓடை ஆக்கிரமிப்பு மீட்பு குழு சார்பில் பல்வேறு தொடர் போராட்டங்கள் பல ஆண்டுகளாக நடத்தப்பட்டன. ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற கடந்த 19.3.2018 மற்றும் 26.4.2018 கடைக்காரர்களுக்கு அறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது. 


இதனிடையே பூவனநாத சுவாமி திருக்கோயில் தேவஸ்தான பயன்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பு கடைக்காரர்கள் சிலர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு இடைக்கால தடை உத்தரவு பெற்றுள்ளனர்.
 

thoothukudi kovilpatti Rain water coming to the stream District administration to drastically eliminate occupation


இந்நிலையில் மழைக்காலங்களில் மழைநீர்  ஓடையில் செல்ல போதிய வழிகள் இல்லாததால் பிரதான சாலையில் தேங்கி பொதுமக்களுக்கு பெரிய பாதிப்புகள் ஏற்படுவது தொடர்வதால் ஆக்கிரமிப்பாளர்கள் உடனடியாக ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே முன்வந்து அகற்றி கொள்ள கடந்த 17.8.2019ல் டி.ஆர்.ஓ. வீரப்பன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு அறிவுரைகள் வழங்கப்பட்டன. 


அதன் தொடர்ச்சியாக நீதிமன்ற தடை உத்தரவில் குறிப்பிட்டுள்ள கடைகளை தவிர்த்து, இதர தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்து ஓடையின் மீது கட்டப்பட்டுள்ள கடைகளை 23.8.19-ம் தேதி மாலை 5 மணிக்குள் காலி செய்திட வேண்டுமென்றும், தவறும் பட்சத்தில் 24.8.19-ம் தேதி காலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்  என வட்டாட்சியர் பி.மணிகண்டன் நோட்டீஸ் வழங்கியிருந்தார்.
 

thoothukudi kovilpatti Rain water coming to the stream District administration to drastically eliminate occupation

 

மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவின்படி வருவாய்துறை, நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி, மின்வாரியம், காவல்துறை அதிகாரிகளுக்கு எழுத்துப்பூர்வமாக தகவல் தெரிவிக்கப்பட்டு தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி சனிக்கிழமை அனைத்து துறை அதிகாரிகள், பணியாளர்கள் காலை 5.30 மணியளவில் தயார் நிலையில் இருந்தனர். ஆனால் போலீஸார் யாரும் வரவில்லை. இதுக் குறித்து வட்டாட்சியர் மணிகண்டன், டி.எஸ்.பி. ஜெபராஜை தொடர்பு கொண்டபோது காவலர்கள், தூத்துக்குடியில் நடைபெறும் 2-ம் நிலை காவலர் தேர்வு பணிக்காக சென்றுவிட்டனர் என தெரிவித்துள்ளார்.
 

ஆக்கிரமிப்புகள் அகற்ற போதிய பாதுகாப்பு வழங்கப்படும் என வெள்ளிக்கிழமை இரவு தெரிவித்த டி.எஸ்.பி.  சனிக்கிழமை காலையில் போலீஸ் தேர்வு பணிக்கு அனைத்து காவலர்களும் சென்று விட்டனர் என கூறியதால், அதிர்ச்சியடைந்த வருவாய்த்துறையினர் உடனடியாக மாவட்ட ஆட்சியருக்கு தகவல் அனுப்பி அடுத்த கட்ட உத்தரவுக்காக காத்திருந்தனர். இதனால் ஆக்கிரமிப்புகள் அன்றைய தினத்தில் அகற்ற முடியவில்லை.

தற்பொழுது திங்களன்று போதிய பாதுகாப்பினை போலீசார் நல்கிட, வருவாய்த்துறையினரும் ஓடை புறம்போக்கு ஆக்கிரமிப்பை அகற்றி வருகின்றனர். 60 ஆண்டுகளாக ஓடைக்கு நீர்வரத்து செல்லாததால் நீரை சேமிக்க இயலாத கோவில்பட்டி மக்கள் இச்சம்பவத்தால் பெருமகிழ்வடைந்து மாவட்ட நிர்வாகத்திற்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.



 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு குறித்து நீலகிரி ஆட்சியர் விளக்கம்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Nilgiris Collector Explains Strong Room CCTV Cameras Malfunction

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில் தான் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று (27.04.2024) மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கின. 

Nilgiris Collector Explains Strong Room CCTV Cameras Malfunction

இந்நிலையில் வாக்கு இயந்திரம் வைக்கப்பட்ட அறையில் சிசிடிவி செயலிழந்தது குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியரும், நீலகிரி மக்களவைத் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலருமான அருணா செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார். அப்போது, “ வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் அதிக வெப்பம் மற்றும் காற்றோட்டம் இல்லாத காரணத்தினால் நேற்று (27.04.2024) மாலை 6.17 முதல் 6.43 வரை 20 நிமிடங்களுக்கு 173 கண்காணிப்பு கேமராக்களும் செயல் இழந்துவிட்டன. அந்தக் குறிப்பிட்ட 20 நிமிடங்களுக்கு எந்தவித கண்காணிப்பு கேமரா பதிவுகளும் இல்லை.

அதாவது அதிக வெப்பத்தால் ஷார்ட் சர்கியூட் ஏற்பட்டு சிசிடிவி கேமராவில் செயலிழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் எந்தவித முறைகேடும் நடக்க வாய்ப்பில்லை. வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளன. அதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. மேலும் இது குறித்து சந்தேகம் இருந்தால் கட்சியினரை அழைத்துச் சென்று காட்ட தயாராக இருக்கிறோம். மத்திய பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட 3 கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு குறைபாடுக்கு 200 சதவீதம் வாய்ப்பு இல்லை. எதிர்காலத்தில் இதுபோல் எந்தப் பிரச்சனைகளும் ஏற்படாமல் இருக்க தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். நீலகிரி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக சார்பில் மத்திய இணையமைச்சர் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியில் உள்ளது குறிப்பிடத்தகது. 

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.