Published on 02/01/2019 | Edited on 02/01/2019
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக எம்.பி தம்பிதுரை, பொங்கல் பண்டிகை நேரம் என்பதால் திருவாரூர் இடைத்தேர்தலை நடத்தக்கூடாது என்றும் இது தனது தனிப்பட்ட கருத்து என்றும் தெரிவித்துள்ளார். மேலும் கஜா புயல் நிவாரணப் பணிகள் முழுமையாக நடைபெற்று முடியாத நேரத்தில் இடைத்தேர்தல் நடத்துவது மக்களை பாதிக்கும் அதனால் தேர்தலை தள்ளி போடுவது பற்றி தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும் என்றும், முத்தலாக் தடுப்பு மசோதாவை மாநிலங்கள் அவையிலும் அதிமுக எதிர்க்கும் என்றும் தெரிவித்துள்ளார்.