திருவண்ணாமலை அண்ணாமலையார் கார்த்திகை தீபத்திருவிழா தென்னிந்தியாவில் புகழ்பெற்றது. 14 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் மகாதீபத்தன்று மட்டும் சுமார் 25 லட்சம் பக்தர்கள் 2662 அடி உயரம் உள்ள மலையை அண்ணாமலையாராக நினைத்து வருவார்கள். சராசரியாக 40 லட்சத்துக்கும் மேற்ப்பட்ட மக்கள் நேரடியாக வந்து. இந்த 14 நாள் திருவிழாவை கண்டு ரசிப்பார்கள்.
தீபத்திருவிழா வரும் டிசம்பர் 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மகாதீபம் 10ஆம் தேதி மலை உச்சியில் ஏற்றப்படுகிறது. இதனை காண கார், வேன்களில் வரும் பக்தர்களுக்காக கார் பார்க்கிங் வசதி நகருக்கு வரும் 9 சாலைகளிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 84 இடங்களில் கார் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஒரே நேரத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட கார்களை நிறுத்த முடியும் என்பது குறிப்பிடதக்கது.
அதில் நகராட்சி பேருந்து நிலையம், தாலுகா அலுவலகம், திருக்கோவிலூர் நகராட்சி பள்ளி மைதானம் என சிலயிடங்களில் மட்டும் கார் பார்க்கிங்கில் வாகனத்தை நிறுத்த முன் பதிவு செய்ய வேண்டும். அதற்காக www.tvmpournami.in என்கிற இணையத்தளம் வழியாக பதிவு செய்ய வேண்டும். வரும் 7ஆம் தேதி முதல் இந்த ஆன்லைன் பதிவு செய்யலாம். இதற்கு கட்டணம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் ஆயிரம் கார்களுக்கு மட்டும்மே இந்த அனுமதி என்பதால் முந்துபவர்களுக்கு அனுமதி கிடைக்கும்.