Published on 14/06/2019 | Edited on 14/06/2019
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் விடுத்துள்ள அறிவிப்பு:
’’சென்னை, அசோக்நகர், அம்பேத்கர் திடலில் இயங்கிவரும் ‘திருமா பயிலகத்தின்’ மூலம் அரசு வேலைவாய்ப்புக்கான பயிற்சி வகுப்புகளைக் கட்டணமின்றி கடந்த சில ஆண்டுகளாக நடத்தி வருகிறோம். இப்பயிலகத்தின் மூலம் பயிற்சி பெற்றவர்கள் பலர், அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்று வேலைவாய்ப்பினைப் பெற்றுள்ளனர்.
திறன் வாய்ந்த பயிற்றுநர்களைக் கொண்டு இயங்கும் இப்பயிலகத்தில் 16.06.2019 (ஞாயிறு) காலை 9 மணிக்கு TNPSC-CCSE-Gr(IV),Gr(II,II(A)) மற்றும் TN-POLICE, SI தேர்வுகளுக்கான அறிமுக வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. மேலும் கட்டணமில்லா தேர்வுத்தொடருக்கான சேர்க்கையும் நடைபெறுகிறது. இப்பயிற்சி வகுப்பு மற்றும் தேர்வுதொடரில் கலந்துகொண்டு பயன்பெற வேண்டுகிறேன்.’’