Published on 30/10/2022 | Edited on 30/10/2022
!["These are the only people who can keep the AIADMK together" - DTV Dinakaran interview](http://image.nakkheeran.in/cdn/farfuture/g_o3GzV1GesDL24QdfXm1W9hLJ8KFRZX2ggC82svYV8/1667132764/sites/default/files/inline-images/N21608_1.jpg)
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 115-வது ஜெயந்தி மற்றும் 60-வது குருபூஜை விழாவையொட்டி, இன்று (30/10/2022) காலை 10.00 மணியளவில் இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் பல்வேறு தரப்பினர், அரசியல் கட்சியினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில் பசும்பொன்னில் தேவர் குருபூஜையில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் தினகரன், ''2017-ல் யார் அதிமுகவை சேர்த்து வைத்தார்களோ அவர்கள் தான் தற்போது பிரிந்து கிடக்கும் அதிமுகவின் அணிகளை சேர்த்து வைக்க முடியும். மக்கள் நலன் மீது முதல்வர் ஸ்டாலின் அக்கறை செலுத்தவில்லை. கடிவாளம் போன்று ஆளுநர் செயல்படவில்லை எனில் தமிழகத்தில் பயங்கரவாதம் அதிகரித்து விடும்'' என்றார்.