



Published on 30/06/2022 | Edited on 30/06/2022
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலக் கூட்டமைப்பு சார்பில் இன்று சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், தற்போது நியமிக்கப்படவிருக்கும் தற்காலிக ஆசியர்களுக்கு பதிலாக தேர்ச்சி பெற்று தகுதி உள்ள ஆசிரியர்களை நிரந்தரமாக நியமிக்க வேண்டும் உட்பட மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் மொட்டை அடித்துக்கொண்டு தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.