
வக்பு வாரிய சட்டத் திருத்தத்தை நிறைவேற்றிய பாஜக அரசையும் அரசையும், பிரதமர் மோடி தமிழகம் வருகையை கண்டித்து தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிதம்பரம் மேலவீதி பெரியார் சிலை அருகில் கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மோடி தலைமையிலான பாஜக அரசு நிறைவேற்றிய வக்பு வாரிய திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியதை கண்டித்தும், திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், தமிழகத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமை தாங்கினார். கட்சியின் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் அனைவரையும் வரவேற்றார். கட்சியின் மாநிலச் செயலாளர்கள் பி. பி. கே. சித்தார்த்தன், ஜெயச்சந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் செந்தில்வேலன், அமீரக காங்கிரஸ் தலைவர் அப்துல் மாலிக், விவசாயிகள் அணித் தலைவர் இளங்கீரன், நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் தில்லை ஆர் மக்கீன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெமினி ராதா, மாவட்ட துணைத் தலைவர் ராஜா சம்பத்குமார் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பாஜக அரசை கண்டித்தும், வக்பு வாரிய திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினார்கள். நகர செயல் தலைவர் தில்லை கோ.குமார் அனைவருக்கும் நன்றி கூறினார்.