கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது மகள் ரம்யா (23), இவர் அதே ஊரிலுள்ள ஒரு தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவரை அருகிலுள்ள விருட்சம்குப்பத்தை சேர்ந்த ராஜசேகர் என்ற இளைஞர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

அதையடுத்து ரம்யாவின் பெற்றோரிடம் பெண் கேட்டுள்ளார் அதற்கு ரம்யாவின் பெற்றோர் பெண் தர மறுத்துள்ளனர். அதையடுத்து இன்று காலை பள்ளியில் வகுப்பெடுத்து கொண்டிருந்த ரம்யாவை ராஜசேகர் கத்தியால் கழுத்தை வெட்டி கொலை செய்து விட்டு தப்பி விட்டார். இரத்த வெள்ளத்தில் வீழ்ந்த ரம்யா அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
பட்டப்பகலில் ஆசிரியை கொலை செய்யப்பட்ட சம்பவத்தினால் குறிஞ்சிப்பாடி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரம்யாவின் உடலை கைப்பற்றி குறிஞ்சிப்பாடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரம்யாவின் உடலானது குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை மையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது தனியார் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ரம்யாவின் இந்த சம்பவம் குறிஞ்சிப்பாடி வட்டார பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது ரம்யா சம்பவத்தினால், பணிபுரிந்த பள்ளிக்கு இன்று விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது.