Published on 11/10/2021 | Edited on 11/10/2021

தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கருப்பு சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
டாஸ்மாக்கில் வன்முறையாளர்களால் கொலை, கொள்ளை, பணியாளர்கள் கொடூரமாக தாக்கப்பட்ட தொடர் நிகழ்வுகள் நடைபெற்று வருவதைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
மேலும், வன்முறையாளர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பணியாளர்களுக்கு உடனே நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அதேபோல், இதுவரை நடவடிக்கை எடுக்காத சம்பந்தப்பட்ட அனைத்து நிர்வாகத்தையும் கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள். மாநிலம் தழுவிய ஐந்து மண்டலங்களில் டாஸ்மாக் ஊழியர்கள் இன்று கருப்பு சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு தங்களுடைய கண்டனங்களைப் பதிவு செய்தனர்.