Published on 06/09/2021 | Edited on 06/09/2021
![Tasmac employees involved in the protest](http://image.nakkheeran.in/cdn/farfuture/WpFPlSlxK8s1l9lVxPCU5XQHAux7WDbhIipRsRRh3T0/1630919979/sites/default/files/inline-images/tasmac-wrkrs.jpg)
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் திருச்சி மண்டலம் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (06.09.2021) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கடந்த 18 ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் பணியாற்றும் இருபத்தி ஏழாயிரம் பணியாளர்களுக்குப் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் வழங்கிட கோரினர்.
மேலும், குறைந்தபட்ச ஊதியம் மற்றும் ஓய்வூதியம் பெறும் உபரி பணியாளர்களை அரசு மற்றும் அரசுத்துறை நிறுவனங்களில் உள்ள காலிப் பணியிடங்களில் பணியமர்த்திட வேண்டும். அதேபோல் ஏ, பி, சி சுழற்சிமுறை பணியிட மாறுதல் அமல்படுத்திட வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதனை நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் சங்க ஊழியர்கள் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.