Published on 15/10/2021 | Edited on 15/10/2021
கடந்த 12ஆம் தேதி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, சென்னை ராஜ்பவனில் உள்ள ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து திமுக மீது புகார் மனுவைக் கொடுத்தார். அன்று மாலை நேரம் திடீரென ராஜ்பவனுக்குச் சென்ற அண்ணாமலையுடன், பொன். ராதாகிருஷ்ணன், எச். ராஜா, நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோரும் உடன் சென்றிருந்தனர்.
இந்நிலையில், தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவரும், தற்போதைய மத்திய இணையமைச்சருமான எல். முருகன் தற்போது தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டிலிருந்து மத்திய அரசின் ஒரே பிரதிநிதியாக எல். முருகன் இருக்கும் நிலையில் இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.