Published on 15/12/2020 | Edited on 15/12/2020
![tamilnadu voters camp 29.72 lakhs voters apply](http://image.nakkheeran.in/cdn/farfuture/D_FOYTjixKFBIw1L6FzG_MVFBIjgMax8TE1Yhp4xBUo/1608023562/sites/default/files/inline-images/voters89666.jpg)
தமிழகம் முழுவதும் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு மற்றும் திருத்தத்திற்கு மொத்தம் 29,72,899 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 20.62 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கக்கோரி 3.99 லட்சம் பேர், வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய 3.27 லட்சம் பேர், வாக்காளர் பட்டியலில் முகவரி மாற்ற 1.83 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.