Skip to main content

போக்குவரத்து தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் வாபஸ்!

Published on 11/03/2020 | Edited on 11/03/2020

பேச்சுவார்த்தையை அடுத்து போக்குவரத்து தொழிலாளர்களின் காத்திருப்பு போராட்டம் திரும்பப் பெறப்பட்டது. 

tamilnadu transport employees government secretary discussion

ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் அரசு தரப்பில் யார் கலந்து கொள்வார் என அறிவிக்கக்கோரி சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இரண்டு நாட்களாக போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் போக்குவரத்துத் துறை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் தொழிலாளர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையின் போது போக்குவரத்துத்துறை செயலர் உறுதி அளித்ததை அடுத்து போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“மாணவர்களுக்கு தரமான சைக்கிள் வழங்க” - தமிழக அரசுக்கு ப.சிதம்பரம் வலியுறுத்தல்

Published on 29/06/2024 | Edited on 29/06/2024
 P Chidambaram urges the TN government To provide quality bicycles to students

தமிழக அரசு பத்தாம் வகுப்பு முடித்து மேநிலை பள்ளி படிப்பிற்கு செல்லும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கி வருகிறது. அதன்படி இந்தாண்டும் மாணவர்களுக்கு இலசவ சைக்கிள் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாணவர்களுக்கு தரமான சைக்கிள் வழங்கும் படி முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளபதிவில், “தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு அரசு வழங்கிய இலவச சைக்கிள்களின் தரக்குறைவு குறித்து மாணவர்களும் ஆசிரியர்களும் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். இந்தத் தரமில்லாத சைக்கிள்களை வேறு வழியில்லாமல் விற்க வேண்டிய கட்டாயம் மாணவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது என்று அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.

சைக்கிள்களை தயாரித்து அளித்த நிறுவனங்கள் எவை? 3-4 நிறுவனங்களுக்கு மேல் இருக்க முடியாதே? இந்தத் தரமில்லாத சைக்கிள்களத் திரும்பப் பெற்று அவற்றுக்கு மாற்றாக தரமான சைக்கிள்களை அந்த நிறுவனங்கள் தர வேண்டும் என்று சட்டப்படியான நடவடிக்கைகளத் தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

“கள்ளச்சாராயத்தை ஒழிக்க சட்டத் திருத்தத்தை அரசு கொண்டு வர வேண்டும்” - வேல்முருகன்

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
Govt should bring amendment to eliminate adulterated liquor says Velmurugan

தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில செயற்குழுக்கூட்டம் திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரி மலையில்  நடந்தது. அக்கட்சியின் நிறுவனத்தலைவர் வேல்முருகன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, “தமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி செய்யும் போது கள்ளச்சாராய மரணம் தொடர்கிறது. இதைத் தடுக்க காவல் துறை, வருவாய்த் துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இது தவிர கள்ளச்சாராய மரணம் நடைபெற்றால் அதற்கு அந்தந்தப் பகுதியில் உள்ள உள்ளளாட்சி பிரநிதிகள் தொடங்கி, சட்டப்பேரவை உறுப்பினர், மக்களவை உறுப்பினர்,  மாவட்ட அமைச்சர் என அனைவரும் அதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும். அதற்கான புதிய சட்ட திருத்தத்தை தமிழக அரசு கொண்டு வர வேண்டும். இது மட்டுமின்றி காவல் துறை மற்றும் வருவாய்த் துறையினரும் பொறுப்பேற்க வேண்டும். 

அப்போது தான் கள்ளச்சாராயம் இல்லாத மாநிலமாக தமிழகம் மாறும். தமிழகத்தில் சமூக நீதி நிலை நாட்ட வேண்டும். இங்கு ஜாதி வாரி கணக்கெடுப்பை அரசு தொடங்க வேண்டும். இந்தியாவில், பீஹார், கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் ஜாதிவாரி கணக்கெடுப்பு பணி நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் அதற்கான அறிவிப்பு இதுவரை இல்லை. எனவே, சட்டப்பேரவையில் தற்போது மானிய கோரிக்கை நடந்து வருகிறது. இதில், காவல் துறையினர் மானியக்கோரியின் போது ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். 

தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணிக்கான ஆட்களை தேர்வு செய்யும்போது தகுதியுள்ளவர்களுக்கு நிரந்தரப்பணி வழங்க வேண்டும். வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளதுபடி முன்னுரிமை அடிப்படையில் வேலை வழங்கி சமூக நீதியை அரசு நிலை நாட்ட வேண்டும். பரந்தூர் மக்கள் வேறு மாநிலத்துக்கு குடியேறுவதாக அறிவித்துள்ளனர். எனவே, அங்கு விமான நிலையம் அமைப்பதற்கான முயற்சிகளை மத்திய அரசு கைவிட வேண்டும், அதற்கான நடவடிக்கைகளை தமிழக  அரசு  மேற்கொள்ள வேண்டும். 

தமிழகத்தில் மணல் திருட்டு அதிகரித்து வருகிறது. இங்கிருந்து ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களுக்கு மணல்கடத்தப்படுகிறது. இதை அரசு இரும்பு கரம் கொண்டு தடுக்க வேண்டும்” என்று கூறினார்.