Skip to main content

தமிழகம் முழுவதும் ரூபாய் 100- ஐ தாண்டியது பெட்ரோல் விலை!

Published on 02/07/2021 | Edited on 02/07/2021

 

tamilnadu petrol and diesel price

 

சென்னை உள்பட தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 100- ஐ தாண்டி விற்பனையாகிறது. மாவட்ட வாரியாக பெட்ரோல் விலை நிலவரம் குறித்து பார்ப்போம். அதன்படி, திருவள்ளூர்- ரூபாய் 100.45,  காஞ்சிபுரம்- ரூபாய் 100.79, செங்கல்பட்டு- ரூபாய் 100.73, வேலூர்- ரூபாய் 101.31, ராணிப்பேட்டை- ரூபாய் 101.09, திருப்பத்தூர்- ரூபாய் 102.04, திருவண்ணாமலை- ரூபாய் 101.75, விழுப்புரம்- ரூபாய் 101.51 விற்பனையாகிறது. 

 

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 33 காசு அதிகரித்து ரூபாய் 100.13- க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் பெட்ரோலின் விலை முதல் முறையாக 100 ரூபாயைத் தாண்டியதால் வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர். அதேபோல், சென்னையில் 3- வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் டீசல் ரூபாய் 93.72- க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்