Published on 12/11/2020 | Edited on 12/11/2020
![tamilnadu medical counselling online students](http://image.nakkheeran.in/cdn/farfuture/CQbtWBdSmzY5dKxrFY71F549hidY6VrbT73FNukS9Aw/1605152057/sites/default/files/inline-images/medical_0.jpg)
தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்விற்கு மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்று (12/11/2020) கடைசி நாள் ஆகும்.
வரும் நவம்பர் 16- ஆம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட உள்ள நிலையில் விரைவில் மருத்துவ கலந்தாய்விற்கான தேதி அறிவிக்கப்பட உள்ளது. இதுவரை அரசு மருத்துவக்கல்லூரிகளில் 24,900, தனியார் கல்லூரிகளில் 14,234 பேர் என 39,134 பேர் விண்ணப்பித்துள்ளனர். சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் நேரடி மருத்துவ கலந்தாய்வு நடைபெறும் என மருத்துவ கல்வி இயக்ககம் ஏற்கனவே அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.