மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் ரஜினிகாந்தை சந்தித்துப் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நான் 1967ல் நேரடி அரசியலுக்கு வந்தவன். 52 ஆண்டுகள் முடிந்துவிட்டன. ஒரு பஞ்சாயத்து தேர்தலில் கூட நான் நின்றதில்லை. 2001ல் மூப்பனார் அவர்கள் மிகவும் வற்புறுத்தி ஆயிரம் விளக்கு தொகுதியில் ஸ்டாலினுக்கு எதிராக சட்டமன்றத்தேர்தலில் நிற்கவேண்டும் என்று சொன்னபோது கூட நான் நிற்கவில்லை. எனவே தேர்தல் குறித்த சிந்தனை எல்லாம் எனக்கு இல்லை என்று தெரிவத்தார்.
பின்னர் அடுத்த ஆண்டு நிச்சயம் ரஜினிகாந்த் அரசியல் கட்சியை தொடங்குவார். ரஜினி ஆழமாக சிந்திப்பவர், எந்த விஷயத்திலும் சாதக, பாதகங்களை அலசி ஆராய்பவர் என்றார். மேலும் உள்ளாட்சி தேர்தல் நடக்கும் என்று இந்த நிமிடம் வரை தான் நம்பவில்லை. உச்சநீதி மன்றத்தில் திமுக ஒரு வழக்கை கொண்டு போய் வைத்திருக்கிறது. அந்த வழக்கும் சதாரணமாக தள்ளிவடக் கூடிய ஒன்று அல்ல. புதிதாத ஐந்து மாவட்டங்களை உருவாக்கிவிட்ட பிறகு, அங்கு வார்டு வரையறை என்ற ஒன்று இருக்கிறது அல்லவா. அந்த வரையறையெல்லாம் முழுமையாக செய்து முடிக்காமல் தேர்தல் நடத்துவது என்பது எந்த வகையில் நியாயம் என்றார்.