Published on 18/11/2019 | Edited on 18/11/2019
சென்னை ஐஐடி மாணவி தற்கொலை வழக்கில் மூன்று ஐஐடி பேராசிரியர்களுக்கு சம்மன்.
கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீப், சென்னை ஐஐடியில் முதலமாண்டு முதுகலை படிப்பு படித்து வந்தார். இவர் கடந்த சனிக்கிழமை (9 ஆம் தேதி) விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.
இந்நிலையில் ஐஐடி பேராசிரியர்கள் சுதர்சன் பத்மநாபன், மிலிந்த், ஹேமசந்திரன் உள்ளிட்ட மூன்று பேருக்கு சம்மன் அனுப்பிய மத்திய குற்றப்பிரிவு போலீசார், இன்று விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளனர்.