Skip to main content

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வீட்டில் தங்கம் பறிமுதல்!

Published on 24/09/2021 | Edited on 24/09/2021

 

Tamil Nadu Pollution Control Board chairman confiscates gold

 

வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகவும், லஞ்சம் வாங்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக உள்ள வெங்கடாசலத்துக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

 

அதன்படி, கிண்டியில் உள்ள அலுவலகம், வேளச்சேரியில் உள்ள வீடு உள்ளிட்ட 11 இடங்களில் லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் அதிரடியாகச் சோதனை நடத்தினர். இந்த சோதனை நேற்று (23/09/2021) காலை தொடங்கியிருந்த நிலையில், இன்று (24/09/2021) அதிகாலை நிறைவடைந்ததாக லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

 

இந்த சோதனையில், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் வெங்கடாசலம் வீட்டில் மேலும் மூன்று கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தங்கத்துடன் 10 கிலோ சந்தன மரப்பொருட்களும், சொத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டது என்று லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. 

 

அடுத்தகட்டமாக, வெங்கடாசலத்தின் வங்கி லாக்கர்களைத் திறந்து சோதனை செய்ய லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

 

வெங்கடாசலம் வீட்டில் இருந்து ஏற்கனவே ரூபாய் 13.5 லட்சம் ரொக்கம், 8 கிலோ தங்கத்தை லஞ்ச ஒழிப்புத்துறையினர் நேற்று (23/09/2021) பறிமுதல் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


 

சார்ந்த செய்திகள்