





Published on 13/06/2024 | Edited on 14/06/2024
கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில் ஆயிரம் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் உபகரணங்கள் வழங்கும் விழா அமைச்சர் பி.கே.சேகர் பாபு தலைமையில் நடைபெற்றது. இதில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் கலந்து கொண்டு வழங்கினார்கள். அருகில் மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, வெற்றியழகன், ஜோசப் சாமுவேல், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ரவிச்சந்திரன், பொதுச் செயலாளர் எஸ்.முரளி, எஸ்.ராஜசேகர், இளைஞர் அணி அமைப்பாளர் டி.லோகேஷ், வட்டச் செயலாளர் சேப்பாக்கம் பிரபாகரன் உள்ளனர்.
படங்கள்: எஸ்.பி.சுந்தர்