![amil nadu government issued pongal gift combo token by ration shop](http://image.nakkheeran.in/cdn/farfuture/fGTsTZxIMT_Vz3Fm5TC0IvMjMzjvNe-VCJ62R4_rK7Q/1672722550/sites/default/files/2023-01/0001-pongaltoken-2.jpg)
![amil nadu government issued pongal gift combo token by ration shop](http://image.nakkheeran.in/cdn/farfuture/mgbOFPiRUxl0ubetnGaSq4G1IPBIj4OfY68iqiJLOL0/1672722550/sites/default/files/2023-01/0001-pongal-token-4.jpg)
![amil nadu government issued pongal gift combo token by ration shop](http://image.nakkheeran.in/cdn/farfuture/6Pa2-s7LcbzlpmP-ggyt9rhk9fmUXI1nNffHDr2b-Nw/1672722550/sites/default/files/2023-01/0001-pongal-token-5.jpg)
![amil nadu government issued pongal gift combo token by ration shop](http://image.nakkheeran.in/cdn/farfuture/YLRMEjzFboi0i9pScvPkPO8RQh4N3WBYDULcOsLMCSw/1672722550/sites/default/files/2023-01/0001-pongal-tokken-1.jpg)
Published on 03/01/2023 | Edited on 03/01/2023
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு பொதுமக்களுக்கு ரூ. 1000 ரொக்க பணம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை வழங்க உள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் விநியோகம் செய்யும் பணி இன்று முதல் வரும் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதையடுத்து பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வை ஜனவரி 9 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைக்கவுள்ளார். இதையொட்டி, சென்னை திருவல்லிக்கேணி ஜாம்பஜார் பக்கீர் தெருவில் பொங்கல் தொகுப்பிற்கான டோக்கன்களை ரேஷன் ஊழியர் வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு விநியோகம் செய்து வருகிறார்.