Published on 14/12/2018 | Edited on 14/12/2018

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் அதிமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுகவில் இணைவது குறித்து கருத்து தெரிவித்தார்.
அப்போது அவர், அமமுகவில் டிடிவி தினகரனில் இருந்து அவர்களை சார்ந்தவர்கள் அனைவரும் திமுகவில் போய் ஐக்கியமாவார்கள். அதற்கு ஒரு முன்னோட்டம்தான் செந்தில் பாலாஜி திமுகவில் இணைவது. சொன்னதுபோலவே விரைவில் தினகரன் திமுகவில் இணைய வாய்ப்பு உண்டு. ஒரு எழுதப்படாத ஒப்பந்தமாகத்தான் முதலில் அவரை அனுப்பியுள்ளார். இவ்வாறு கூறினார்.