நக்கீரன் ஆசிரியர் கைது செய்யப்பட்டதற்கு சுப.வீரபாண்டியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நக்கீரன் இணையதளத்திற்கு அளித்த பேட்டி:-
''நக்கீரன் ஆசிரியர் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்ற செய்தி அதிர்ச்சியாக இருக்கிறது. எதற்காக கைது செய்யப்பட்டிருக்கிறார் என்பது சொல்லப்படவில்லை. புகழ்பெற்ற வார ஏட்டின் ஆசிரியர். மக்களால் அறியப்பட்டவர். அவரை கைது செய்கிறப்போதுக்கூட எதற்காக கைது செய்கிறோம் என்று சொல்லாதது மிகப்பெரிய சர்வாதிகாரப்போக்கு தமிழ்நாட்டில் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அவருடைய வழக்கறிஞரை கூட அவரை சந்திக்க விடாமல் மறுத்திருக்கிறார்கள். நாங்கள் பொடாவில் கைது செய்யப்பட்ட காலத்தில்கூட வழக்கறிஞர்களை சந்திப்பதற்கு அனுமதி இருந்தது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்று நக்கீரன் ஆசிரியை பார்க்க முயற்சித்தபோது, அவருக்கும் அனுமதி தர மறுக்கப்பட்டிருக்கிறது என்றால் நெருக்கடி நிலை காலத்தில் இருந்ததைவிட மோசமான காலகட்டத்தில் நாம் வந்துவிட்டோமோ என்று எண்ணத் தோன்றுகிறது. இது சட்டப்படியான நடவடிக்கை இல்லை. இது அராஜகமான, ஒரு சர்வாதிகாரமான போக்கு, இதனை நாடு முழுவதும் எதிர்க்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். இதனை தொடர்ந்து அனுமதிக்க முடியாது. ஒரு ஜனநாயக நாட்டிற்கு ஏற்றது இல்லை''.