Skip to main content

மாணவர்களின் விழிப்புணர்வு மெளன நாடகம்; வாகன ஓட்டிகள் நெகிழ்ச்சி

Published on 05/11/2023 | Edited on 05/11/2023

 

School students awareness silent play Motorists are resilient

 

ஈரோடு மாவட்டம் திண்டல் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவியரின் சாலை போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி ஈரோட்டின் மையப்பகுதிகளான ஆட்சியர் அலுவலகம், பன்னீர் செல்வம் பூங்கா மற்றும் காளை மாடு சிலை ஆகிய பகுதிகளில் உள்ள போக்குவரத்து சிக்னல்களில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் முதல்வர் சுப்புலட்சுமி தலைமை தாங்கி விழிப்புணர்வு மௌன நாடகத்தை தொடங்கி வைத்தார்.

 

அப்பொழுது, தங்கள் வருகைக்காக காத்திருப்பவர்கள் முன்னால், மௌன நாடகம் (MIME) மற்றும் போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பறை முழங்க இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் மூன்று பேர் பயணித்து விபத்தில் சிக்கி உயிர் இழக்கும் நிலை, மது போதையில் இருசக்கர வாகனத்தை இயக்கி இருசக்கர வாகன ஓட்டிகள் பாதிக்கப்படும் நிலை, இதனால் ஏற்படும் உயிர் சேதம், பொருள் சேதம், பாதிப்பு உள்ளிட்டவைகளை தத்ரூபமாக மௌன நாடகம் மூலம் அரங்கேற்றினர். இதனால் வாகன ஓட்டிகள் நெகிழ்ச்சி அடைந்தனர்.

 

மேலும், சாலை விதிகைளைப் பயன்படுத்தி, சீட்பெல்ட் அணிந்தும், ஹெல்மெட் அணிந்தும் வந்த வாகன ஓட்டிகளுக்கு பூங்கொத்து வழங்கி ஊக்குவித்தனர், விதிகளை மீறியவர்களுக்கு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய சிறிய வடிவிலான ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டன. இதில் 50 தனியார் மாணவ மாணவியர் மற்றும் 20 ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் பங்கேற்றனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்