Published on 10/09/2018 | Edited on 10/09/2018

ஆசிரியர் பற்றாக்குறையை கண்டித்து மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ம.புடையூர் கிராமத்தில் ஆதிதிராவிட மேல்நிலைப்பள்ளி உள்ளது. ஆறாம்வகுப்பு முதல் பிளஸ் 2 வரை இப்பள்ளியில் 118 மாணவிகள், 92 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இப்பள்ளியில் தற்போது ஐந்து ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். கடந்த இரண்டு வருடங்களாக ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதைக் கண்டித்து 210 மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பள்ளி முன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அனைத்து மாணவர்களும் வகுப்புகளை புறக்கணித்து வீடுகளுக்கு சென்றனர்.