பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து ஜனவரி 8 மற்றும் 9ம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் அனைத்து தொழிற் சங்கங்களுடன் ஈடுபடபோவதாக ஆட்டோ தொழிலாளர் சங்க மாநில செயலாளர் சிவாஜி தெரிவித்துள்ளார்.
திருவாரூர் சிபிஎம் அலுவலகத்தில் தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் மாநில் நிர்வாகிகள் மற்றம் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மாநில துணைச்செயலாளர் அனிபா தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற மாநில செயலாளர் சிவாஜி செய்தியாளர்களிடம்கூறுகையில்,
"வரலாறு காணாத வகையில் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து ஏழை எளிய மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று மோட்டார் தொழில் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. மேலும் வாகன இன்சூரன்ஸ் கட்டணமும் உயர்ந்துள்ளது. எனவே இந்த பாதிப்பை போக்கும் வகையில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெட்ரோல் டீசல் உயர்வு ரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளைவலியுறுத்தி வருகிற 2019 ஜனவரி 8 மற்றும் 9ம் தேதி நாடு முழுவதும் தொழில் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என தெரிவித்துள்ளார்.