கடலூர் மாவட்டம் சிதம்பரம் தலைமை தபால் நிலையத்தில் கடவுச்சீட்டு சேவை மையம் தொடங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிதம்பரம் தொகுதி எம்பி சந்திரகாசி, அஞ்சல்துறையில் மத்திய மண்டல தலைவர்(திருச்சி) அம்பேஷ்உப்மண்யு, சென்னை மண்டல கடவுச்சீட்டு அதிகாரி அசோக்பாபு உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு துவக்கி வைத்தனர்.
இந்த கடவுச்சீட்டு சேவை மையத்தை புது கடவுச்சீட்டு விண்ணப்பித்தல், புதுப்பித்தல் ஆகிய சேவைகள் வழங்கப்படும். இனிமேல் சிதம்பரம் அதன் சுற்று வட்ட பகுதிகளை சார்ந்தவர்கள் கடவுச்சீட்டு விண்ணப்பிக்க சென்னைக்கு செல்ல வேவையில்லை அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இரண்டு நபர்களுக்கு கடவுச்சீட்டு பதிவு செய்ததற்கான ஒப்புதல் ரசீது வழங்கப்பட்டது.
இதில் கடலூர் மாவட்ட அஞ்சலகங்களின் கண்காணிப்பாளர் சிவப்பிரகாசம், உதவி கண்காணிப்பாளர் அப்துல்லத்தீப், சிதம்பரம் தலைமை அஞ்சல் அதிகாரி ரத்தினசபாபதி, சிதம்பரம் அஞ்சல் கோட்ட உதவி கண்காணிப்பாளர் சுவாமிநாதன் உள்ளிட்ட அஞ்சல்துறை ஊழியர்கள்,பொதுமக்கள் கலந்துகொண்டனர்.