சோம்பரசம் பேட்டை காவல் நிலையத்தில் பெண் போலீசுக்கு முத்தமிட்ட காட்சி அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்தது. அது வாட்ஸ்அப் மற்றும் வலைதளங்களில் வைரலாக பரவியது. இது சம்மந்தமாக ஜீயபுரம் டி.எஸ்.பி ராதாகிருஷ்ணன் நடத்திய அதிரடி விசாரணையில், சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் நடந்த சம்பவம் மற்றும் எஸ்.எஸ்.ஐ பாலசுப்பிரமணியனிடம் விசாரித்த விவரம் ஆகியவற்றை அறிக்கையாக மாவட்ட எஸ்.பி. ஜியாவுல் ஹக்கிடம் கொடுத்தார்.
இதற்கிடையே பெண் போலீசை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், மிரட்டல் விடுத்ததாகவும் 3 பிரிவுகளின் கீழ் எஸ்.எஸ்.ஐ. பாலசுப்பிரமணியன் மீது சோமரசம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சம்பந்தப்பட்ட பெண் போலிஸ் சசிகலாவிடம் அன்றைய தினம் நடந்தது என்ன? என்று பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 3 இன்ஸ்பெக்டர்கள் விசாரணை நடத்தி அறிக்கை தயார் செய்துள்ளனர். இந்த நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடுவதை அறிந்த பாலசுப்பிரமணியன் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கேட்டு தலைமறைவான சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியனுக்கு சொந்த ஊர் திருச்சி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட உய்யகொண்டான் திருமலை அருகே உள்ள கொடாப்பு ஆகும். அவருக்கு மனைவி, மகள், மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் அதே ஊரைச்சேர்ந்த திருமணம் ஆன இன்னோரு பெண்ணுடன் தொடர்பு இருந்திருக்கிறது.
கடந்த 3 நாட்களாக அந்த பெண்ணையும் காணவில்லையாம். உறவினர்கள் தேடியும் கிடைக்கவில்லை. இதற்கிடையே பாலசுப்பிரமணியன் தனது தோழியையும் தன்னுடன் அழைத்து சென்று தலைமறைமானதாக ஏரியாக்காரர்கள் சொல்கிறார்கள்.. அதை உறுதி செய்யும் வகையில் போலீசார் விசாரித்துள்ளனர். தற்போது பாலசுப்பிரமணியன் அந்த பெண்ணுடன் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்துள்ளது. எனவே, சோமரசம்பேட்டை போலீசார் ராஜபாளையம் செல்ல திட்டமிட்டுள்ளனர்.
இதற்கிடையில் முத்த வீடியோ யார் வெளியிட்டது என்கிற பிரச்சனையில் அந்த ஸ்டேஷனில் ஏற்கனவே இருந்த இன்ஸ்பெக்டருக்கு வேண்டப்பட்ட ஏட்டு ஒருவர் இந்த வீடியோவை வெளியிட்டார்கள் என்பதும். தற்போது ஏற்கனவே இருந்த இன்ஸ், அவருடைய வேண்டப்பட்ட ஏட்டு என ஆகியோர் மீது விசாரணை திரும்பி உள்ளது. ஒரு முத்தகாட்சி வெளியாகி இதை யார் வெளியிட்டது என்கிற விசாரணை பல்வேறு திருப்பங்களுக்கு இடையே சென்று கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.