Published on 20/05/2019 | Edited on 20/05/2019
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று டெல்லி செல்கிறார்.
நாளை நடைபெற உள்ள தேசிய ஜனநாயகத் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஓ.பி.எஸ் செல்கிறார்.
நாளை நடைபெறவுள்ள அக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடியும் கலந்துகொள்கிறார் என்கிற தகவல் மதியம் வெளியான நிலையில் இன்றே டெல்லிக்கு விரைகிறார் துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ்.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் பாஜகவுக்கு சாதகமாக தகவல்கள் வெளியானது. இதனையடுத்து நாளை தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தலைவர்களை அழைத்து அமித்ஷா நாளை டெல்லியில் விருந்து கொடுக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதில் கலந்துகொள்வதற்காக இந்தியா முழுவதும் உள்ள தேஜ கூட்டணி கட்சிகள் தலைவர்கள் டெல்லி நாளை செல்கிறார்கள்.