Published on 02/03/2018 | Edited on 02/03/2018

ஈரோட்டில் இன்று வட இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான இந்திரா நகரில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. ஜவுளி, மஞ்சள் வியாபாரத்தில் பல ஆயிரக்கணக்கான வட மாநில மார்வாடி சமூகத்தினர் இங்கு வசிக்கிறார்கள்.
ஹோலி பண்டிகையையொட்டி இன்று வட மாநில சிறுவர்கள், சிறுமிகள் மற்றும் இளம் பெண்கள் பலவிதமான கலர்பொடியை ஒருவர் மீது ஒருவர் பூசிக் கொண்டு ஆடிப்பாடி உற்சாகமாக கொண்டாடாடினார்கள்.