சிதம்பரம் காவலர் குடியிருப்பில் 100-க்கும் மேற்பட்ட காவல்துறையில் பணியாற்றும் ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தலைமைக் காவலர் காவலர், காவலர் என அனைவரும் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார்கள்.
மேலும் புதுச்சத்திரம், பரங்கிப்பேட்டை, புவனகிரி உள்ளிட்ட பகுதிகளில் குடியிருக்கும் காவல் துறை சார்ந்த குடும்பங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை சிதம்பரத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை சிதம்பரம் டிஎஸ்பி ரமேஷ்ராஜ் துவக்கி வைத்தார். இதில் மருத்துவர்கள் ராமநாதன், கோகுல், பிரகாஷ், ஜெயஸ்ரீ, இந்துஜா, லோகபுஷ்பாஞ்சலி, தேவி உள்ளிட்ட மருத்துவர்கள் மற்றும் மருந்தாளுநர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டு காவல்துறை சார்ந்த குடும்பங்களில் உள்ளவர்களுக்கு அவர்களின் உடல் சார்ந்த நோய்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகள் வழங்கினார்கள்.
மேலும் தற்போது கரோனா மற்றும் டெங்கு உள்ளிட்ட நோய்களில் எவ்வாறு பாதுகாத்துகொள்ள வேண்டும் என்பது குறித்து அவர்களுக்கு மருத்துவர்கள் விளக்கி கூறினார்கள். மேலும் கரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. மருத்துவ முகாமில் 40 பேர் குழந்தைகள் 60 பேர் பெரியவர்கள் எனக் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.