Published on 06/07/2022 | Edited on 06/07/2022
![special class for students who have not passed 10th and 12th](http://image.nakkheeran.in/cdn/farfuture/Rzp2pgFDtDsHqSxbZxhyWIPHd9J8_VTyBuKtLA9_SSA/1657079442/sites/default/files/inline-images/14_43.jpg)
10 மற்றும் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துவதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
கரோனா காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெறாத நிலையில், இந்தாண்டு மே மாதம் வழக்கம்போல தேர்வு நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கடந்த மாதம் 20ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
இந்த நிலையில், பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மாலை நேரங்களில் சிறப்பு வகுப்புகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. விரைவில் நடக்க இருக்கும் துணைத்தேர்வில் வெற்றி பெறுவதற்கு ஏதுவாக இந்த சிறப்பு வகுப்பானது நடத்தப்பட உள்ளது.