Published on 29/09/2021 | Edited on 29/09/2021

தென் மாவட்ட விரைவு ரயில்கள் புறப்படும் நேரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. அதில் திருச்சி முதல் திருவனந்தபுரம் இன்டர்சிட்டி சிறப்பு ரயில் நெல்லையில் இருந்து மதியம் 12.15 மணிக்குப் பதிலாக மதியம் 12.10 மணிக்குப் புறப்படும். நாகர்கோவில் - கோவை இரவுநேர ரயில் திண்டுக்கல், மதுரை, விருதுநகர், வாஞ்சி மணியாச்சி ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து இரவு 11.30, நள்ளிரவு 12.30, 1.15, 2.45 மணிக்குப் பதிலாக இரவு 11.25, நள்ளிரவு 12.20,1.10, 2.30 மணிக்குப் புறப்படும். ஓகா முதல் ராமேஸ்வரம் ரயில் மதுரையில் இருந்து மாலை 3.55 மணிக்குப் பதிலாக மாலை 3.50 மணிக்குப் புறப்படும்.