Published on 21/07/2022 | Edited on 21/07/2022
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் அவ்வப்போது கைது செய்து வருவது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் ராமேஸ்வரம் மீனவர்கள் ஆறு பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது இலங்கை கடற்படை.
நேற்று 500க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றிருந்த நிலையில் தலைமன்னார், தனுஷ்கோடி இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த பொழுது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி ஒரு விசைப் படகை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை, 6 மீனவர்களை கைது செய்து மன்னார் கடற்படை முகாமிற்குக் கொண்டு சென்றனர்.