தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் டாப்ஸ்டேசன் உள்ளது. குரங்கணியில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் வனப்பகுதி அமைந்துள்ளது. இங்கு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் குரங்கணி வனப்பகுதியில் பிடித்த தீயில் சுற்றுலா சென்ற 39 பேர் சிக்கிக்கொண்டனர். மலைப்பகுதியில் சிக்கியுள்ளவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வனத்துறையினருடன் போலீஸ் மற்றும் ராணுவத்தினர் சேர்ந்து தீயை அணைக்க முயற்சித்து வருகின்றனர். ஹெலிகாப்படரிலும் மீட்பு பணி நடந்தது.

முதற்கட்டமாக 12 பேர் மீட்கபட்டனர். இந்த நிலையில் குரங்கணி மலையில் காட்டுத்தீயில் சிக்கியவர்களில் 10 பேருக்கு கடுமையான தீக்காயம் ஏற்பட்டுள்ளது. தீ விபத்தில் இருந்து மீட்கப்பட்டவர்கள் தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.

Advertisment

இந்நிலையில் குரங்கணி மலை பகுதியில் நடைபெற்று வரும் மீட்பு நடவடிக்கைகளை நேரில் கண்காணிக்க 5 ஐ.ஏ,.எஸ் அதிகாரிகள் கொண்ட குழு புறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.